• Enquiry

Ziyarath

ஜியாரா பயணம்

ஜியாரா என்றால் என்ன?

உம்ராவுடன் ஜியாரா என்றால் மக்கா நகர் சென்று உம்ரா கடமை முடித்துவிட்டு, பின்பு அங்கு ஒரு ஜீம்ஆ தொழுகையும், பிறகு மதினா சென்று அங்கு சில நாட்கள் தங்கி இபாதத் செய்யவும், அங்கிருந்து பாலஸ்தீனம் சென்று அங்கு நபி சுலைமான் (அலை) காலத்து பைத்துல் முகத்தஸ் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளியில் ஜீம்ஆ தொழுவதுடன், குர்ஆன் கூறும் பல வரலாற்று தளங்கள் மற்றும் நபி மார்கள் வாழ்ந்த இடங்களை பார்த்து படிப்பினை பெறுவதற்காக செல்வதே ஆகும்.

எகிப்தில்

  • எகிப்தின் அருங்காட்சியம்
  • ஃபிர்அவ்வின் உடல்
  • உலக பிரசித்தி பெற்ற பிரமீடுகள்
  • நைல் நதியில் கப்பல் பயணம்
  • வாகனம் கடலுக்கடியில் செல்லும் சூயஸ் கால்வாய்
  • தூர்சினா மலை
  • நபிமார்கள், நபித்தோழர்கள் வாழ்ந்த பல இடங்கள்...

ஜோர்டானில்

  • மரணக்கடல் (Dead Sea)
  • குகைத்தோழர்கள் 309 வருடங்கள் உறங்கிய அதிசிய குகை
  • மாவீரன் ஸலாஹீத்தீன் அய்யூப் கோட்டைகள்
  • மூசா(அலை) அவர்களின் நீர் ஊற்று.
  • நபித்தோழர்கள் கண்ட போர்களங்கள்.

பாலஸ்தீனில்

  • பைத்துல் முகத்தஸ் என்ற மஸ்ஜித் மிஹ்ராப்
  • மர்யம் (அலை) அவர்களின் மிஹ்ராப்
  • நபி இப்ராஹீம்(அலை), ஜக்கரியா(அலை), ஈஸா(அலை) வாழ்ந்த இடங்கள்
  • ஸைத்தூன் எனப்படும் ஆலிவ் மரத் தோட்டங்கள்.

இஸ்ரேலில்

  • அகபா வளைகுடா (BAY AQABA)
  • இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை இரயிலில் சுற்றிப் பார்த்தல்.

மக்கா ஜியாரா

மஸ்ஜித் ஆயிஷா(ரலி), ஹிரா குகை, தெளர் குகை, மினா கூடாரங்கள், முஸ்தலிஃபா, அரஃபா மைதானம், ஜமராத் எனப்படும்(கல்லெறியும்) இடம், நபித்தோழர் பலர் அடக்கம் செய்யப்பட்ட மக்பரத்துலமுஅல்லா, முடிந்தால் காஃபாவின் திரை செய்யுமிடம்,ஜம்ஜம் நீரேற்றும் நிலையம் ஆகிய இடங்கள் அழைத்துத்சென்று காட்டுகிறோம்.

மாதீன ஜியாரா

மஸ்ஜித் அல்-குபா, மஸ்ஜித் அல்-கிப்லதைன், உஹத் போர் நடந்த இடம், அகல் போர் நடந்த இடம், மஸ்ஜித் அல்ஜீமுஆ, மற்றும் முடிந்தால் குர்ஆன் அச்சகம். வாகனங்களை இழுக்கும் அபூர்வ சாலை போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று காட்டுகிறோம்.

ஜித்தா கடற்கரை பயணம்

எழில் மிகு கடற்கரை, கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல், வானளாவ பீரிட்டெழும் தண்ணீர் தொட்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று காட்டப்படும் (ஹாஜிகளின் விருப்பத்தின் கீழ்)

தாயிஃப் நகரத்து வீதியிலே...

இஸ்லாமிய வரலாற்று தளங்களை காண்பதற்கு உம்ராவுக்கு பின் தாயிஃப் ஜியாராவை அமைத்து தருகிறோம். தாயிஃப் சென்று திரும்பும் வழியில் கர்னுல் மனாஸில் மீக்காத் எல்லைலிருந்துஇரண்டாம் உம்ரா செய்தும் வாய்ப்பை அமைத்து தருகிறோம்.

பத்ரு போர்க்களம்

ஹாஜிகளின் விருப்பத்திற்கேற்ப பத்ரு போர்க்களம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று பத்ரு யுத்த வரலாற்றை தெளிவுபடுத்துகிறோம்.

Places